கோடையில் தயிர் சாப்பிடுவது நல்லது தான்.. ஆனால் இவற்றுடன் சாப்பிட்டால் ஆபத்து!

First Published May 1, 2024, 2:47 PM IST

கோடை காலத்தில் தயிர் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், சிலவற்றுடன் தயிர் சாப்பிடக் கூடாது.

நமது ஆரோக்கியத்திற்கு எது நல்லது எது கெட்டது என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இந்நிலையில், கோடை காலத்தில் நமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சில நல்ல குறிப்புகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். குறிப்பாக தயிர் பற்றி சில ஆச்சரியமான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில உணவுப் பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாது. மீறினால், ஆரோக்கியத்தில் பல்வேறு வகையான பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சரி வாங்க இப்போது தயிருடன் எந்தெந்த உணவுகள் சாப்பிட கூடாது என்பதை இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

எண்ணெய் உணவுகள்: எண்ணெயில் பொரித்த உணவுகள், பரோட்டா, சப்பாத்தி, பூரி ஆகியவற்றை தயிருடன் ஒருபோதும் சாப்பிட கூடாது  என்கின்றனர் நிபுணர்கள். 

மீன்: இறைச்சியும் சைவ புரதமும் ஒத்து போவதது போல, மீனும் தயிரும் ஒருபோதும் ஒத்து போகாது. மீறி சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

பால்: பால் நமது உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். எனவே, இதை தயிருடன் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சினை ஏற்படும். எனவே பால் மற்றும் தயிர் ஒன்றாக சாப்பிட வேண்டாம்.

வெங்காயம்: வெங்காயம் மற்றும் தயிர் இரண்டையும் ஒன்றாக பலர் சாப்பிடுகிறார்கள். ஆனால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தாது என்று பலர் கூறுகிறார்கள். அப்படி சாப்பிடால்  சருமத்தில் அலர்ஜி ஏற்படுமாம். ஆகையால், இவை இரண்டையும் எந்த சூழ்நிலையிலும் ஒன்றாக சாப்பிட வேண்டாம்.

இதையும் படிங்க:  தயிர் தலைமுடிக்கு ஒரு வரப்பிரசாதம்... எப்படி தெரியுமா..??

மாம்பழம்: மாம்பழம் உடலை வெப்பமாக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆனால், தயிர் உடலை குளிர்சையாக்கும். எனவே, இவை இரண்டும் ஒன்றாக சேரும் போது அஜீரண பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதையும் படிங்க:  தினமும் தயிர் சாப்பிடலாமா...? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..??

பருப்பு: பருப்பு உடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற  பிரச்சனைகள் ஏற்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!