38 மொழிகளில் உருவாகி உள்ள மிகப்பெரிய பான் இந்தியா படம்.. ஆனா கல்கி 2898 AD, புஷ்பா 2 இல்ல..

First Published May 1, 2024, 3:24 PM IST

புஷ்பா 2 மற்றும் கல்கி 2898 AD இரண்டும் கங்குவாவை விட அதிக பட்ஜெட்டில் உருவானாலும், கங்குவா படம் சில விஷயங்களில் இந்த படங்களை விஞ்சி உள்ளது.

தென்னிந்திய படங்கள் தற்போது இந்திய திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்களுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதால் பான் இந்தியா படங்களாக மாறுகின்றன. பாகுபலி 1, 2, RRR, புஷ்பா, காந்தாரா, கேஜிஎப் 1, 2, சலார் என பல படங்களை உதாரணாமாக சொல்லலாம். 

அந்த வகையில் புஷ்பா  2: தி ரைஸ், தேவாரா மற்றும் கல்கி 2898 கி.பி போன்ற தென்னிந்திய டங்கள் இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அளவு மற்றும் ரீச் ஆகியவற்றில் அவற்றை மிஞ்சிய மற்றொரு படம் உள்ளது. சூர்யாவின் கங்குவா இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படமாக குறிப்பிடப்படுகிறது.

புஷ்பா 2 மற்றும் கல்கி 2898 AD இரண்டு படங்களும், கங்குவாவை விட அதிக பட்ஜெட்டில் உருவானாலும், கங்குவா படம் சில விஷயங்களில் இந்த படங்களை விஞ்சி உள்ளது. ஆம். கங்குவா படம் உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாக உள்ளது. ஒரு படம் நான்கைந்து மொழிகளில் வெளியாவதே பெரிய விஷயமாக கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், கங்குவா தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு பெரிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

கங்குவா இரண்டு காலகட்டங்களின் கதையை முன்வைக்கிறது, ஒன்று வரலாற்று காலக்கட்டம் மற்றும் நிகழ்காலம், இதை மனதில் வைத்து, படக்குழுவினர் இந்த படத்தை உலகம் முழுவதும் பல இடங்களில் படமாக்கி உள்ளனர். கோவா, ஐரோப்பாவில் உள்ள பல அழகான இடங்களில் படமாக்கியுள்ளனர், மேலும் போர் காட்சிகள் உட்பட பல காட்சிகள் இலங்கையில் 60 நாட்கள் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் சில காட்சிகள் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. சமீபத்தில் கேரளா மற்றும் கொடைக்கானல் காடுகளில் சூர்யா நடிக்கும் முக்கியமான காட்சி படமாக்கப்பட்டது. கடந்த ஆண்டு, அக்டோபரில், பாங்காக்கில் கங்குவா படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.

kanguva new teaser

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா லீட் ரோலில் நடிக்கும் கங்குவா படம், சுமார் 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி ஆக்‌ஷன் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

Kanguva

இந்த படத்தில் பாபி தியோல், திஷா படானி, நட்ராஜன், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடிங் கிங்ஸ்லீ, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. கங்குவா படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் சூர்யா 6 கேரக்டரில் நடித்து வருகிறார். 2024-ம் ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கங்குவா மாறி உள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்..

click me!